×

கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா!: பாதிப்பு எண்ணிக்கை 51.50 லட்சத்தை தாண்டியது..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பிரேசிலில் உயிரிழப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வரும் நிலையில் உயிரிழப்பு 7 லட்சத்து 29 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. 1 கோடியே 27 லட்சத்து 26 ஆயிரத்து 148 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனிடையே நியூசிலாந்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பரவலே இல்லை என்ற சாதனையை எட்டியுள்ளது.

அங்கு கடந்த 100 நாட்களாக கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட கண்டறியப்படவில்லை. இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்ததாவது, ஆம், கொரோனா பரவலில் இது மிக முக்கியமான காலகட்டம். ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 100 நாட்களாகவே இங்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டார். உலகிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில் பாதிப்பு 51 லட்சத்து 50 ஆயிரத்து 60 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 174 பேர் உயிரிழந்தனர்.

அதேசமயம் 26 லட்சத்து 38 ஆயிரத்து 673 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர். அடுத்தபடியாக கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2வது நாடான பிரேசிலில் உயிரிழப்பு 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது. பாதிப்பு 30 லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

Tags : America ,victims ,US ,Corona , Corona, USA, vulnerability
× RELATED தங்க கடத்தல் ராணி சொப்னாவுடன் தொடர்பு:...