×

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பலி: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்..!!!

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் கொரோனா தனிமை முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. அதாவது ஆந்திராவில் நேற்றைய நிலவரப்படி சுமார் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் அரசு  மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் தவிர கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறப்படும் தனியார் மருத்துவமனைகளும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா  நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து சமூக இடைவெளியுடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக நட்சத்திர ஹோட்டல்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களை, தனியார் மருத்துவமனைகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கொரோனா நோயாளிகள் உள்ள விஜயவாடா நட்சத்திர ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் 7 பேர் சம்பவ இடத்தியிலே உயிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தீவிபத்தில் இறந்தவர்களை நினைத்து மனம் வருத்தமாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிராத்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கோவிட் -19 வசதியில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய செய்தியால் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. மாநில அரசுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் மையம் உறுதி செய்கிறது. இந்த வருத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் எனது இரங்கல். காயமடைந்தவர்களை விரைவாக மீட்க பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.  இதனிடையே, உயிரிழந்தோர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.


Tags : Vijayawada ,Andhra Pradesh ,families ,Amit Shah ,victims ,fire , Andhra Pradesh Vijayawada fire kills 12: PM Modi, Amit Shah offer condolences to families
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்