இலங்கை தாதா விஷம் வைத்து கொலையா?: அங்கொட லொக்கா கை, கால்கள் நீல நிறத்தில் இருந்தது...பிரேத பரிசோதனை தகவலால் பரபரப்பு..!!

கோவை: இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மர்ம மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கொட லொக்காவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கை, கால்கள் நிறம் நீல நிறமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதால் கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை தாதா அங்கொட லொக்கா, கோவையில் பெயரை மாற்றி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், அவரின் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கொட லொக்கா உயிரிழந்த நிலையில், அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அங்கொட லொக்காவின் உடற்கூராய்வு அறிக்கையில் அவனது கை விரல்கள், கால் விரல் நகங்கள் நீல நிறமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கொட லொக்கா விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கொட லொக்காவை இவர்கள் கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல அங்கொட லொக்கா கோவையில் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.

Related Stories: