புற்கள் மண்டி கிடக்கும் தாந்தோணிமலை கோயில் குளம் சீரமைக்கப்படுமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

கரூர்: புற்கள் வளர்ந்த நிலையில் உள்ள தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைப்படுமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் முன்பு தெப்பக்குளம் உள்ளது. ஆண்டுதோறும் மாசி மகத் தேரோட்டம் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதோடு, புற்கள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் ஊரடங்கு காலத்திலும் கோயில் வெளிப்புற வளாகத்தை சுற்றி சுவாமி தரிசனம் செய்து செல்லும் பக்தர்கள், தெப்பக்குளத்தை பார்த்து மனம் வருந்துகின்றனர். எனவே சம்பநதப்பட்ட அதிகாரிகள் கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தை சுத்தமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: