×

ஒரே நாளில் 64,399 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியது: இதுவரை 43,379 பேர் பலி.!!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.53 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை  14.27 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 64,399 பேர்  கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கையானது 21,53,010 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,28,747 பேர் சிகிச்சை பெற்று வரும்  நிலையில்,14,80,884 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 861 உயிரிழப்புக்கள் பதிவாகி  உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 43,379 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில்  குணமடைந்தோர் விகிதம் 68.79% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.01% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை  பெறுபவர்கள் விகிதம் 29.20% ஆக குறைந்துள்ளது.

மாநிலங்கள் வாரியான விவரம்!!

*மகாராஷ்டிராவில் நேற்று 12,822 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,03,084 ஆகி உள்ளது. நேற்று  275 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,367 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,081 பேர் குணமடைந்து மொத்தம்  3,38,362 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 1,47,355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*தமிழகத்தில் நேற்று 5,883 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆகி உள்ளது  இதில் நேற்று  118 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,808 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,043 பேர் குணமடைந்து மொத்தம்  2,32,618 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*டெல்லியில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,44,127 ஆகி உள்ளது இதில் நேற்று  16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,098 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1130 பேர் குணமடைந்து மொத்தம்  1,29,362 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 10,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Tags : corona victims ,India , 64,399 people infected in a single day: The number of corona victims in India has crossed 21 lakh: So far 43,379 people have died. !!!
× RELATED இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.59 லட்சமாக உயர்வு!!