×

அவசர ஊர்திகள் தவிர எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை: தமிழகத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்...!!!

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு கடந்த ஜூலை 31ம் தேதி முடிவடைந்த நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும்,  31.8.2020 (ஆகஸ்ட் 31ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2, 9, 16, 23, 30ம் தேதி) எவ்வித தளர்வுகளும் இன்றி,  தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
 
இதன்படி, இன்று 7-ம் கட்ட ஊரடங்கில் இன்று முதல் 2-வது ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் விநியோகம், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர  எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள்  பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசியமின்றி யாரும் வெளியில் வரக்கூடாது. இது தொடர்பாக சந்தேகங்களுக்கு போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறையை 044-23452330, 044-23452362 அல்லது 90003130103 என்ற  எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம், என கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , No vehicles are allowed except emergency vehicles: Full curfew will be enforced in Tamil Nadu on the 2nd Sunday without any relaxation ... !!!
× RELATED மீண்டும் ஊரடங்கு?: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி