×

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.29 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.98 கோடியாக உயர்வு...65,172 பேர் கவலைக்கிடம்

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.29 லட்சத்தை தாண்டியது.  சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது  209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா,  இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,29,484 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும்  கொரோனாவால் 19,800,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,719,181 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,172 பேர்  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டு 6,352,171 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,152,020 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 43,453 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,479,804 பேர்  குணமடைந்தனர். 

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 165,070 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,149,723 ஆக அதிகரித்துள்ளது.

* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 100,543 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,013,369 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,854 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,82,347 ஆக அதிகரித்துள்ளது.

* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,844 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471,012 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,503 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 361,442 ஆக அதிகரித்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 324,692 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,566 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309,763 ஆக உயர்ந்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,203 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250,103 ஆக உயர்ந்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,261 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 216,896 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,324 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197,921 ஆக அதிகரித்துள்ளது.

* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,658 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123,503 ஆக அதிகரித்துள்ளது.

* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,199 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,157 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,987 ஆக அதிகரித்துள்ளது.

* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,929 ஆக அதிகரித்துள்ளது.

* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,039 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,439 ஆக அதிகரித்துள்ளது.

* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,070 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில்  பலி எண்ணிக்கை  உயர்ந்துக்கொண்டு  வருகிறது.Tags : Worldwide, the death toll from corona exceeds 7.29 million; The impact has risen to 1.98 crore ... 65,172 people are worried
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...