×

சிஐடியு வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் கே. வைத்தியநாதன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றோம், வேதனையடைந்தோம்.  

அவருக்கு வயது 98. அவர்களது மறைவு சிஐடியு இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : death ,Marxist Communist Party , Marxist Communist Party, death, CITU Vaithiyanathan
× RELATED பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களை...