×

சொல்லிட்டாங்க...

புதிய கல்விக்கொள்கை குறித்த மத்தியஅரசின் ஒரு தலைப்பட்சமான முடிவானது, இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிக்கையில், பிற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான இடங்களை குறைத்தது அநீதி.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் அனாவசியமாக நிறைய பேர் வெளியூர் செல்வதை தடுப்பதற்காகத்தான் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் பல ஆண்டு கால கனவு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது.
- கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Tags : Told ...
× RELATED சொல்லிட்டாங்க...