×

சில்லி பாயின்ட்...

* அணியில் இருப்பவர்களிலேயே அதிவேகமாக ஓடக்கூடியவனாக இருக்கும் வரை கிரிக்கெட் விளையாட்டில் நீடிப்பேன் என்று எம்.எஸ்.டோனி கூறியுள்ளார்.
* கொரோனா தொற்று உறுதியான 5 ஹாக்கி வீரர்களும் நலமுடன் இருப்பதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
* யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரின் கால் இறுதிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியதைத் தொடர்ந்து, ஜுவென்டஸ் அணியின் பயிற்சியாளர் மவுரிஸியோ சாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
* 2006ல் நடந்த பைஸலாபாத் டெஸ்ட் போட்டியின்போது டோனிக்கு வேண்டுமென்றே இடுப்புக்கு மேலாக ‘பீமர்’ வகை புல்டாஸ் வீசியதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
* இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் யஜ்வேந்திர சாஹல் - நடன அமைப்பாளர் தன வர்மா நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.
* ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகளிடையே நடைபெற இருந்த நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டித் தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
* பாகிஸ்தான் அணியுடன் 2வது டெஸ்ட் போட்டியில் மோத உள்ள இங்கிலாந்து அணியில் புதுமுக வேகப் பந்துவீச்சாளர் ஓல்லி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : Roulette Point ...
× RELATED சில்லி பாயின்ட்...