×

ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமை திருச்சியில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே உள்ள அனலை கிராமம் பெரியார் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்த் (26). வாத்தலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர், நேற்றுமுன்தினம் இரவு 9மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை கோவிந்தராஜ் எழுந்து மாட்டு கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு மகன் ஆனந்த் தனது தாயின் சேலையில் தூக்கில் தொங்குவதை கண்டு பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக ஜீயபுரம் போலீசார் கூறுகையில், ‘ஆனந்த் சமீபகாலமாக செல்போனில் ரம்மி ஆடி வந்துள்ளார். இதற்காக தன்னுடன் பணிபுரியும் சக நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் போனதால் அவருக்கு நாளுக்குநாள் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் தற்கொலை செய்தாரா என விசாரிக்கிறோம் ’ என்றனர்.

Tags : Policeman ,suicide ,Trichy , Policeman,commits suicide , hanging , Trichy
× RELATED ஆந்திர மாநிலத்தில் துப்பாக்கி...