முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியும் காற்றில் பறந்தது

சென்னை: முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் நேற்று வழக்கத்தை விட குடிமகன்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் வாரந்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதை முன்னிட்டு நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தது. சாக்குப்பை, அட்டைபெட்டி உள்ளிட்டவைகளை கொண்டுவந்து குடிமகன்கள் மதுவகைகளை வாங்கிச்சென்றனர்.

கடந்த சனிக்கிழமையை விட நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை அன்று ரூ.188.86 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. எனவே, நேற்று ரூ.192 கோடி வரையில் விற்பனை நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனையின் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் அரசு தெரிவித்த கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது கடைபிடிக்காமலேயே மதுவிற்பனை நடைபெற்றது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டப்பட்டுள்ளது.

Related Stories: