ஆறாவது நாளாக நூற்றுக்கும் மேல் தொடரும் உயிரிழப்பு தமிழகத்தில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா

* ஒரு நாள் தொற்று 5,883 ஒட்டு மொத்த இறப்பு 4,808

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 118 பேர் மரணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ஆறாவது நாளாக 100ஐ தாண்டியுள்ளது.  இதையடுத்து மொத்த உயிரிழப்பு 4,808 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரேநாளில் 5,883 பேருக்கு தொற்று ஏற்பட்டதால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி பார்த்தால் இன்னும் 2 நாளில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.  அதேபோல மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் தினசரி 90 வரை இருந்த மரணங்களின் எண்ணிக்கை தற்போது 100ஐ கடந்து சென்று கொண்டே இருக்கிறது.

சென்னையில் கடந்த 66 நாட்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்குள் வந்த நிலையில் நேற்றும் ஆயிரத்துக்கும் கீழ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆறாவது நாளாக நேற்றும் தமிழகத்தில் 118 மரணங்கள் பதிவாகி உள்ளன.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 67,553 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,883 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 986 பேர், அரியலூர் 42, செங்கல்பட்டு 425, கோவை 183, கடலூர் 192, தருமபுரி 21, திண்டுக்கல் 138, ஈரோடு 58, கள்ளக்குறிச்சி 90, காஞ்சிபுரம் 284, கன்னியாகுமரி 196, கரூர் 40, கிருஷ்ணகிரி 57, மதுரை 91, நாகப்பட்டினம் 77, நாமக்கல் 32, நீலகிரி 19, பெரம்பலூர் 45, புதுக்கோட்டை 114, ராமநாதபுரம் 55, ராணிப்பேட்டை 138, சேலம் 55, சிவகங்ைக 55, தென்காசி 203, தஞ்சாவூர் 227, தேனி 452, திருப்பத்தூர் 58, திருவள்ளூர் 391, திருவண்ணாமலை 120, திருவாரூர் 30, தூத்துக்குடி 245, நெல்லை 126, திருப்பூர் 45, திருச்சி 84 வேலூர் 154, விழுப்புரம் 92, விருதுநகர் 246 என 5,866 பேரும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 17 பேரும் சேர்த்து 5,883 பேர் நேற்று ஒரேநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,410 பேர் ஆண்கள், 2,473 பேர் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 1.75, 744 ஆண்கள், 1,15,136 பேர் பெண்கள், 27 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 5,403 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 2,32,618 பேர்குணமடைந்துள்ளனர். தற்போது 53,481 பேர் மருத்துவமனையில் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 118 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதில் தனியார் மருத்துவமனையில் 37 பேரும், அரசு மருத்துவமனையில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பார்க்கும்போது சென்னை 20, கோவை 10, சேலம் 3, திருவள்ளூர் 5, தேனி 5, தென்காசி 1, நெல்லை 8, செங்கல்பட்டு 8, காஞ்சிபுரம் 4, தருமபுரி 1, திருப்பத்தூர் 5, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 2, மதுரை 4, திருச்சி 2, திண்டுக்கல் 4, தூத்துக்குடி 2, விருதுநகர் 4, அரியலூர் 1, சிவகங்கை 1, தஞ்சாவூர் 3, திருவண்ணாமலை 2, வேலூர் 2, விழுப்புரம் 3, கன்னியாகுமரி 1, ராணிப்பேட்டை 3, கரூர் 1, கடலூர் 3, கிருஷ்ணகிரி 1, ராமநாதபுரம் 1, சிவகங்கை 4, நாமக்கல் 2 என 118 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: