தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா?...மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 196 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐஎம்ஏ பட்டியல் வெளியிட்டுள்ளது. உயிரிழந்த 196 மருத்துவர்களில் தமிழகத்தில் மட்டும் 43 பேர் என்று ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐஎம்ஏ பட்டியலை சுட்டிக் காட்டி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,32,618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,043 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 53,481 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,808 ஆக உயர்ந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா காலத்தில் தினமும் பல மருத்துவர்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இந்தியாவில் மரணம் அடைந்த மருத்துவர்கள் 175 பேர் என்றும் அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் 43 பேர் என்றும் செய்தி வந்தது. அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்தார். இந்தியா முழுவதும் இது வரை 196 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இன்று ஐ.எம்.ஏ தகவல் தந்துள்ளது. இவர்களில் எத்தனை பேர் தமிழக மருத்துவர்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா?  மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல.

Related Stories: