×

வாலிபர் எரித்து கொலை; குப்பை தொட்டியில் சடலம் வீச்சு: போலீஸ் விசாரணை

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் குப்பை தொட்டி அருகில் நேற்றிரவு 40 வயது ஆண் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் கணபதிபுரம் உள்ள வீதியில் உள்ள குப்பை தொட்டியில். இன்று காலை அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக சென்றுள்ளனர். அப்போது குப்பை தொட்டி அருகில் பாதி எரிந்த  நிலையில் ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக  கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் எனவும், வேறு எங்கேயோ கொலை செய்து எரித்துவிட்டு குப்பை தொட்டி அருகே சடலத்தை வீசி சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை ஈரோடு ஏ.டி.எஸ்.பி. பொன்கார்த்திக்குமார், டிஎஸ்பி ராஜூ ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.


Tags : death ,Body ,investigation ,Police investigation ,Walipar , Walibur, burnt to death, trash can, corpse delivery
× RELATED விஷவாயு தாக்கி வாலிபர் சாவு