×

தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,481

சென்னை: தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 2,90,907ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,32,618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,043 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 53,481 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,808 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94,100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,734 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 20 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,290 ஆக உள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 129 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் இதுவரை 30,41,529 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 1,75,744 பேரும், பெண்கள் 1,15,136 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 27 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

* தமிழகத்தில் 12 வயதிற்குள் 14,319 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 2,39,991 பேரும், 60 வயதிற்கு மேல் 36,597 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.Tags : Corona ,Tamil Nadu ,Department of Health , Corona, Department of Health
× RELATED வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில்...