வேளாண் உள்கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டங்கள்: பிரதமர் மோடி நாளை வெளியீடு

டெல்லி: வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடிக்கான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுகிறார். 17,000 கோடி ரூபாய் நிதியை 8.5 கோடி விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பிரதமர் வெளியிடுகிறார். வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள், செயலாக்க அலகுகள் போன்ற சமூக விவசாய சொத்துக்களை உருவாக்குவதற்கு இந்த நிதி ஊக்கமளிக்கும்.

விவசாயிகள் தங்கள் பொருட்களை அதிக அளவில் சேமித்து வைப்பதன் மூலம் பொருட்கள் வீணாவதைக் குறைக்கவும், செயலாக்கம் மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை அதிகரிக்கவும் முடியும். ரூ 1 லட்சம் கோடி நிதி வசதி, பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து நிதிதிட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும். 12 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகள் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளன. பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி யோஜ்னா திட்டம் 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நேரடியாக பணமாக வழங்கியுள்ளது. ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்படுவதால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் செயல்படுத்துதல் இணையற்ற வேகத்தில் நடந்துள்ளது.

Related Stories: