×

தஞ்சை அரசு மருத்துவமனையை சீரமைக்க ரூ.25 லட்சம் வழங்கிய நடிகை ஜோதிகா; அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர் பாராட்டு

சென்னை: தஞ்சை அரசு மருத்துவமனைக்கு போதிய உபகரணங்கள் வாங்க நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். ரூ.25 லட்சம் நிதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடிகை ஜோதிகா வழங்கினார். நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், மருத்துவமனையை சீரமைக்கவும் ரூ.25 லட்சம் நிதியையும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார். சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார்.

அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார். ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் மாண்புமிகு திரு.துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் திரு.வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சொல்லோடு நின்று விடாமல் களத்தில் செயலில் இறங்கிய ஜோதிகாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும் இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ் கூறியதாவது; ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” என்றார். “தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Jyotika ,Vijayabaskar ,Tanjore Government Hospital , Tanjore Government Hospital, Actress Jyotika, Minister Vijayabaskar
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...