ஆகஸ்ட் 10 முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளி; மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!!!

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 (ஆகஸ்ட் 31ம் தேதி)  நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (9, 16, 23, 30ம் தேதி)எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அவப்போது அறிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள்  50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் வரும் 10-ம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரூ.10,000-க்கும் குறைவான வருமானம் கொண்ட வழிபாட்டு தலங்களை ஆட்சியர் அனுமதியுடன் திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியரிடமும் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிராமப்புற வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>