×

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்

மான்செஸ்டர்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஷான் மசூத் 156, பாபர் ஆஸம் 69, ஷதாப் கான் 45 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு, ஆர்ச்சர் தலா 3, வோக்ஸ் 2, ஆண்டர்சன், பெஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறியதால் திணறியது.


Tags : innings ,England , England
× RELATED ஆஸி.யுடன் 2வது ஒருநாள் போட்டி பதிலடி தந்தது இங்கிலாந்து