×

ஒரே நாளில் 62,538 பேர் பாதிப்பு இந்தியாவில் புதிய உச்சம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதிதான் முதல் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த 110 நாட்களில் இந்த பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியது. அடுத்த 59 நாட்களில் இது 10 லட்சத்தைக் கடந்தது. அதன் பிறகு, கடந்த 21 நாட்களில் மிக அதிவேகத்தில் பரவி,  நேற்று முன்தினம் இரவு 20 லட்சத்தை கடந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கை, ‘வெள்ளிக் கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 62,538 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20,27,074 ஆக உயர்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 41,585 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரமட்டும் 886 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,78,105 ஆக உயர்ந்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 67.98 சதவிகிதமாகும்.  நாடு முழுவதும் தற்போது 6,07,384 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளது.

Tags : India , India, Corona
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...