×

கொரோனாவால் தனிமையில் இருந்த வருமானவரித்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6வது தெருவை சேர்ந்தவர் மணிகண்ணன் (54). குடும்பத்துடன் வசித்து வரும் இவர், ஆயிரம்விளக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் சரக்குகள் சேவை வரி பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். இந்நிலையில், மணிகண்ணனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர், தனக்கு சொந்தமான நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் 5வது தெருவில் உள்ள மற்றொரு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.  நேற்று காலை உணவு வழங்குவதற்காக மணிகண்ணன் தனிமைப்படுத்திக் கொண்ட வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, மணிகண்ணன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவரது உடலை மீட்டு ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வீட்டை சோதனை செய்த போது, கடிதம் ஒன்று சிக்கியது. அதில் ‘தனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  இருப்பினும் தற் கொலை குறித்து முழு விசாரணை  நடத்துமாறு  குடும்பத்தார் கோரியுள்ளனர்.

Tags : Income tax officer ,suicide ,Corona , Corona, Income Tax Officer, committed suicide by hanging
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...