வங்கி கணக்கில் 45 கோடி மோசடி: வங்கி மேலாளர் உட்பட 3 பேர் மீது சிபிஐ வழக்கு

சென்னை: சென்னை துறைமுகம் பொறுப்பு கழகத்தின் வங்கி கணக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. அந்த பணம் சட்டவிரோதமாக வங்கி அதிகாரிகள் உடந்தையுடன் தனிநபர் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு, அதிலிருந்து ₹45 கோடி மோசடி செய்யப்பட்டது வங்கி கணக்காய்வில் தெரியவந்தது.  இந்தியன் வங்கி துணை இயக்குநர் ஆறுமுகம் மோசடி குறித்து சிபிஐயில் புகார் அளித்தார்.

புகாரின்படி, சிபிஐ விசாரணை நடத்தி, கோயம்பேடு இந்தியன் வங்கி கிளை மேலாளர் சேர்மதிராஜ், மோசடியில் ஈடுபட்ட மணிமொழி, கணேஷ் நடராஜன் ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: