×

கலைஞரின் 2ம் ஆண்டு நினைவுநாள் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞரின் 2ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சைதாப்பேட்டையில் அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலைஞரின் 2ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், கொரோனா நோய தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன.

சைதை அரசு மருத்துவமனைக்கு 10,000 முகக்கவசங்கள், 100 லிட்டர் சானிடைசர், 10 கிலோ கபசுர குடிநீர் பவுடர் போன்றவற்றை மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய தனிமனித சமூக இடைவெளியுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நண்பகல் 12 மணியளவில் சைதை மேற்கு பகுதி சைதாப்பேட்டை, தேரடி திடலில் அருகில் வழங்கி னார். நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், தாயகம்கவி எம்எல்ஏ, ஏஎம்வி.பிரபாகர்ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Udayanidhi Stalin , Artist, 2nd Anniversary, Cleaner, Udayanithi Stalin
× RELATED நீட் தேர்வை ரத்து செய்து பழைய...