×

அமைச்சர்கள் காரை வழிமறித்த காட்டு யானை

போத்தனூர்: நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நேற்று இரவு கோவைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். பர்லியார் அருகே வந்தபோது திடீரென ஒரு காட்டு யானை ஒன்று சாலையில் நின்று அமைச்சர்கள் வாகனத்தை வழிமறித்தது.  இதனால் பாதுகாப்பு வாகனங்களுடன் அங்கு காத்திருந்த அமைச்சர்கள் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் அங்கிருந்து கிளம்பி கோவை வந்தடைந்தனர்.


Tags : wild elephant, ministers car
× RELATED களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்