×

திருக்குவளையில் கலைஞர் சிலை: காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: திருக்குவளையில் அமைக்கப்பட்ட கலைஞரின் மார்பளவு சிலையை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வழியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்த தலைவர் கலைஞர், பிறந்த வீட்டில், தவழ்ந்த வீட்டில், விளையாடிய வீட்டில், வளர்ந்த வீட்டில் இன்று அவரது திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இனி திருக்குவளை செல்பவர்கள் அனைவருக்கும், அந்த வீட்டில் தலைவர் கலைஞர் இருக்கிறார் என்ற நினைவுகள் வரும். கலைஞர் எங்கும் செல்லவில்லை, இங்கே தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றும். அத்தகைய உணர்ச்சியின் அடையாளமாகத்தான் இந்தச் சிலையைத் திறந்து வைத்திருக்கிறேன். முத்தமிழறிஞர் புகழ் வாழ்க. அவர் காட்டிய பாதையில் எந்நாளும் நடப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர், கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் முன்கள வீரர்களாகச் செயல்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரது தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தலைவரே, இயற்கை உங்களை எங்களிடமிருந்து பிரித்தாலும் நீங்கள் காட்டிய வழியில் தமிழகம் என்றென்றும் பயணிக்கும். அவ்வழி நின்று, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிறரை காக்க அயராது பாடுபடும் முன்களவீரர்களுக்கு உங்கள் நினைவு நாளில் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.Tags : MK Stalin , Screwdriver, artist statue, video, MK Stalin
× RELATED மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை...