×

வருகிற 10ம் தேதி அறிவிக்கப்பட்ட காய்கறி, பூ, பழம் மார்க்கெட் கடையடைப்பு ஒத்திவைப்பு: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: வருகிற 10ம் தேதி அறிவிக்கப்பட்ட காய்கறி, பூ,பழம் மார்க்கெட் கடையடைப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விக்கிரமராஜா அறிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று ெவளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி இணை ஆணையர், வருவாய்  அதிகாரி ஆகியோர் எங்களை அழைந்து  பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 12ம் தேதி இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி வர உள்ளது. எனவே அறிவித்துள்ள காய்கறி, பூ, பழம் கடையடைப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். மேலும் முதல்வரும், துணை முதல்வரும் தலைநகர் திரும்பிய பின்னர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, கோயம்பேடு வணிக வளாக திறப்பிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர்.

இதனை பேரமைப்பும், கோயம்பேடு வணிக வளாக கூட்டமைப்பும் ஏற்றுள்ளது. எனவே வருகிற 10ம் தேதி தமிழகம் தழுவிய காய்கறி, பூ, பழம் ஒரு நாள் கடையடைப்பை தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம். மீண்டும் அரசின் அறிவிப்பையும், நிலைபாட்டையும் பொருத்து, கோயம்பேடு வணிக வளாகம் மற்றும் மாநிலத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்து காய்கறி மார்க்கெட்டை  திறப்பதற்காக பேரமைப்பு எடுக்க வேண்டிய  ஆலோசனையையும், நடவடிக்கையையும்  முன்னெடுத்துச் செல்லும். எனவே, வருகிற 10ம் தேதி நடைபெற இருந்த தமிழகம் தழுவிய காய்கறி, பூ, பழம் மார்க்கெட் மற்றும் சில்லரை கடை, கடையடைப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Wickramarajah ,announcement ,fruit market stalls , Vegetable, Flower, Fruit Market, Diabetes, Wickramarajah
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...