×

கொரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி!: மனைவி, குழந்தையை காண முடியாத விரக்தியில் விபரீத முடிவு..!!

தேனி: தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐ.டி. ஊழியர் ஒருவர் மனைவி மற்றும் குழந்தையை காண முடியாத விரக்தியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில்  ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞரின் மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கோம்பையில் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை பார்க்க பெங்களூருவில் இருந்து கோம்பை திரும்பிய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டதால் அவர் உத்தமபாளையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இளைஞரின் மனைவிக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் அவரும் கைக்குழந்தையுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஐ.டி. ஊழியர் தான் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி சிகிச்சை மையத்தின் இரண்டாவது தலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் முகம், கால்களில் பலத்த காயமடைந்த அவருக்கு அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் மீட்டு முதலுதவி கொடுத்தப் போது அவர் ஏற்கனவே கையிலும், கழுத்திலும் கத்தியால் அறுத்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க முடியாத மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags : Corona Treatment Center , Corona Treatment ,Employee ,suicide attempt,
× RELATED கொரோனா சிகிச்சை மைய ஊழல் வழக்கில்...