கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி : கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.கேரளாவின் இடுக்கி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். துக்கமான இந்த நேரத்தில் என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கேரளத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, கோழிக்கூடு ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

தொடர் மழையால் இடுக்கி ராஜமாலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் தங்கியிருந்த 80-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>