×

கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உடல் எரிப்பு.: மதுரையில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை தீவிரம்

மதுரை: இலங்கையை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உடல் எரிக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. அங்கொட லொக்கா உடல் மதுரையில் எரிக்க உதவிய வழங்கறிஞர் சிவகாமி தங்கி இருந்த வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தினர்.

அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவர் தங்கி இருந்த 5 வீடுகளின் உரிமையாளர்கள், சிவகாமியின் பெற்றோர் மற்றும் முன்னாள் கணவர் வினோதன் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகினர்.

வழக்கறிஞர் சிவகாமியை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக வினோதன் தெரிவித்தார். அவரின் நடவடிக்கை பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டதாக வினோதன் கூறினார். மேலும் தன்னை கொலை செய்ய சிவகாமி முயற்சி செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 


Tags : police investigation ,Madurai ,Angoda Loka , Kidnapping, Angoda Loka, body, police , Madurai
× RELATED மதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் சடலமாக மீட்பு