10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10-ம் தேதி வெளியீடு...!! காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் முடிவவை www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றி பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பள்ளி,கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்படுவதால் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

அதேபோல, பொதுத்தேர்வு எழுத இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களும் தேர்வில்லாமலேயே தேர்ச்சி பெற்று விட்டதாகவும், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அண்மையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை உயர்கல்வித்துறை வெளியிட்டது. இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் 10ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் சார்ந்த குறை ஏதேனும் இருந்தால், அவர்கள் பயிலும் பள்ளிகள் மூலம் குறை தீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

Related Stories: