×

ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நிதி நிறுவனம் ஆரம்பிப்பதாக கூறி துளசி மணிகண்டன் என்பவரை பண மோசடி செய்ததாக நீதிமனி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில்  இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பண மோசடியில் சினிமா தயாரிப்ப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

அதனையடுத்து ஜூலை 24-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு இராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். கொரோனா தாக்கம் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் என ஞானவேல் ராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 7-ம் தேதி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர். மேலும் ஆகஸ்ட் 7-ம் தேதி நேரில் ஆஜராக தவறினால் ஞானவேல்ராஜா மீது காவல்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் ஞானவேல்ராஜா தரப்பில் தாக்கல் செய்த மற்றோரு மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், பணமோசடி வழக்கில் விசாரணைக்கு வரும் போது ஞானவேல்ராஜாவை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். 


Tags : branch ,ICC ,Gnanavelaraja , ICC ,branch , restraining ,against ,Gnanavelaraja
× RELATED திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க...