×

இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு...!!!

டெல்லி: இந்தியாவில் உள்ள மருத்துவக் கட்டமைப்பில் மிகவும் குறைவானதாக உள்ள சில மாநிலங்களில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கிராமப் புறங்களில் அதிகப்படியான கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அதிகப்படியான மாநிலங்களில், பெருநகரங்களில் மட்டுமே மருத்துவ கட்டமைப்பு போதுமான அளவில் உள்ளது. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லை என்பது தெளிவான கருத்தாகும்.

மராட்டியம், குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் பெருநகரங்களில் மட்டுமே கொரோனா நோய்த்தொற்று அதிகமாகப் பரவி இருக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் ஆந்திராவில் கிராமப்புறங்களில் தான் கொரோனா பரவல் அதிகப்படியாக உள்ளது. குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 27 சதவீதம் மட்டுமே நகரங்களில் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 73 சதவீதம் கிராமங்களில் பதிவாகியுள்ளது. இதேபோல், பீகார் மாநிலத்திலும் 27.8 சதவீதம் மட்டுமே நகரங்களில் பதிவாகியுள்ளது.

அதிகப்படியான தொற்று கிராமங்களில் தான் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில பகுதிகளில் மட்டுமே அதிக கொரோனா பாதிப்பு இருக்கிறது. மற்றப் பகுதிகளில் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்த நம்பிக்கையை இது எங்களுக்கு அளிக்கிறது. இதுவரை நகர்ப்புறப் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன என, கொரோனா தொற்றுக்கான மருத்துவ அவசரநிலை நிர்வாக திட்டத்துக்கு தலைமை வகிக்கும் வி.கே.பால் தெரிவித்திருந்தார்.


Tags : India ,villages , India, Medical Structure, Villages, Corona
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...