×

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் வெடிவிபத்துக்கு காரணமான 16 அதிகாரிகள் கைது

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து துறைமுக மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதிக அபாயம் கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருட்களை சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்ததாக அவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணைக்காக 16 அதிகாரிகள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் அதிபர் மைக்கேல் ஆவ்ன் துறைமுக சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு சரக்குக் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த வேதிப்பொருள் துறைமுகக் கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

பெய்ரூட் துறைமுகத்தில் நேரிட்ட பயங்கர வெடிவிபத்துக்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சியப் போக்கே காரணம் என கூறி பொதுமக்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. லெபனான் நாட்டின் தலைநகரம் பெய்ரூட்டில் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் துறைமுகம் உருக்குலைந்து சின்னாபின்னமானது.

வெடி விபத்து காரணமாக சுமார் 135 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், 4 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.



Tags : port ,explosion ,Beirut ,Lebanese ,capital , Lebanon, Beirut, fire
× RELATED தமிழக பகுதியில் அத்துமீறி...