ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; பல தீவிரவாத குழுக்களுக்கு தலைவர் இல்லை: காஷ்மீர் டிஜிபி!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில்   தீவிரமான பயங்கரவாதிகள் முன்னதாக 350 முதல் 400 தீவிரவாதிகள் வரை இருந்தனர்.  அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது தற்போது 200 பேர் மட்டுமே உள்ளனர். அனைத்து தீவிரவாத குழுக்களும் தற்போது தலைவர் இல்லாமல் உள்ளன. பாக்கிஸ்தானை தளமாகக் கொண்டு கையாளுபவர்களால் நியமிக்கப்பட்ட  குழுவின் தலைவர்கள் பிடிபட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர்.  2019ம் ஆண்டு, ஜூலை வரை மொத்தம் 131 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் நாங்கள் மும்முரமாக இருந்ததால் அந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 29 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். எங்கள் நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. மொத்தத்தில், 2019 ல் 160 தீவிரவாதிகளை கொன்றுள்ளோம், 5000க்கும் மேற்பட்ட தேடுதல் வேட்டைகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு, இன்று வரை மொத்தம் 150 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 30 பேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள், 120 பேர் உள்ளூர்வாசிகள் ஆவர். அவா்களில் 39 போ் பயங்கரவாத அமைப்புகளில் முக்கிய தளபதிகள் ஆவா்.

உள்ளூா் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பறிமாற்றம், ஹவாலா மூலம் பணம் அனுப்பப்படுவது என அனைத்து பணப் பறிமாற்றமும் பெரும்பாலும் தடுக்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பயங்ரவாத தாக்குதல்கள் 70 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும், சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து முன்னச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூா் இளைஞா்கள், பிரிவிணைவாத தலைவா்கள் என 5,500 போ் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டனா்.அவா்களில், வன்முறையில் இனி ஈடுபடமாட்டோம், அமைதியைக் கடைப்பிடிப்போம் என்ற நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திட்ட அனைவரும் இப்போது விடுவிக்கப்பட்டுவிட்டனா், என்று கூறியுள்ளார்.

Related Stories: