×

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நெல்லை: கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருநெல்வேலி சென்றுள்ளார்.  திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.30 கோடியில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2,800 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட  உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முடிவுற்ற ரூ.32.30 கோடி  மதிப்பிலான 20 திட்டப்பணிகளை  முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, நெல்லை, தென்காசியில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போது வாய்ப்பில்லை. இ-பாஸ் முறையை எளிமையாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்றும் அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ. 5,000 நிவாரண உத்தரவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.  சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதனைபோல், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின் .கீழ் விவசாயிகளுக்கு ரூ.8,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்களை அதிகரிக்கப்பட்டுள்ளன. நெல்லையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.1000 கோடியில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. ராதாபுரம் கால்வாய் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் குடிமராத்துப் பணிகள் நிறைவடையும்.

தாமிரபரணி -நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு திட்டத்தின் 4-ம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும். சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரூ.6,448 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. ஆலங்குளத்தில் அரசு, கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். தென்காசி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் 75% நிறைவடைந்துள்ளது. நெல்லையில் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்பதே நோக்கம். நெல்லை, தென்காசி மாவட்ட விவசாயிகள், தொழில் துறையினர் அளித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றார்.


Tags : Palanisamy ,ambulance drivers ,corona spread ,announcement ,announcemen , As soon as the corona spread came under control, public transport: Rs 5,000 each for 108 ambulance drivers ... Chief Minister Palanisamy's announcemen
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...