இ - பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பில்லை : முதல்வர் பழனிசாமி பேட்டி

நெல்லை : நெல்லை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லையில் கொரோனா தடுப்புப் பணி ஆய்வு செய்த பின், செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது, கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்.நெல்லை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன.நெல்லை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக 100 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கம்.நெல்லையில் மிகப்பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படுகிறது.இ - பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பில்லை, என்றார்.

Related Stories: