×

தஞ்சை தொகுதி எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி..: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தஞ்சை: தஞ்சை தொகுதி திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை எப்போது மாறி, மீண்டும் பழைய நிலை திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். பலரை உயிரிழக்க செய்துள்ள இந்த கொடிய வகை கொரோனா வைரஸால் தமிழக ஆளுநர் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மா. கோவிந்தராசு, ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் தானாக முன்வந்து வியாழக்கிழமை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது  வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : constituency MLA ,Tanjore ,hospital , Thanjavur, MLA, Neelamegam, Corona
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...