×

அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!: வானிலை மையம் தகவல்..!!

சென்னை: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிககனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தொடர்ந்து அப்பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில்  நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த 3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பொறுத்தளவில் அவலாஞ்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு 58 செ. மீட்டர் அளவுக்கு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே  நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,Theni ,Coimbatore ,Nilgiris ,Weather Center , Red alert, Nilgiris, Coimbatore ,Theni districts,
× RELATED அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!