×

கொரோனா தொற்று எதிரொலி: ஈரோடு மாநகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்!!!

ஈரோடு:  ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அலுவலகமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி செயற்பொறியாளருக்கு தொற்று உறுதியான நிலையில், அலுவலங்களில் பணிபுரியும் 135 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதன் முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மாநகராட்சி அலுவலகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றானது சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. இதில் தற்போது 240 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனையடுத்து மாவட்ட அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இருப்பினும் உயிர்கொல்லி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல், மாறாக தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள்தான் தற்போது கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர்.

இதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அலுவலகமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே செயற்பொறியாளருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அலுவகத்தில் பணிபுரியும் 135 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மேலும் 4 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Echo ,Corona Infection: Erode Corporation Office ,corporation office , corona infection,Erode corporation office ,
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...