×

தண்டவாளத்தில் மழை வெள்ளம் 2 ரயில்களில் சிக்கித் தவித்த 290 பயணிகள் மீட்பு

மும்பை: மும்பையில் பெய்த மழையால், ரயில் பாதையில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியதால் 2 புறநகர் ரயில்களில் சிக்கித் தவித்த 290 பயணிகளை ரயில்வே போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
 மும்பையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் நகரின் பல்வேறு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் சாண்ட்ஹர்ஸ்ட் ரோடு ரயில் நிலையம் அருகே தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியதால் தொடர்ந்து ரயிலை இயக்க முடியாமல் டிரைவர்கள் தவித்தனர்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினசில் இருந்து கர்ஜத் நோக்கி சென்ற ஒரு ரயிலும், சத்ரபதி சிவாஜி டெர்மினசை நோக்கி வந்த மற்றொரு ரயிலும் மஜித் பந்தர் ஸ்டேஷன் அருகே வெள்ளத்தில் சிக்கி கொண்டன. அந்த ரயில்களை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இது பற்றி தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 ரயில்களிலும்  இருந்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டனர். இதில் 39 பயணிகளை படகுகளை பயன்படுத்தி தேசிய பேரிடர் மீட்பு படையினரும், 251 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் மீட்டனர்.

Tags : passengers , Rain flooding ,passengers ,Mumbai rain, platform
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...