ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன; இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; முதல்வர் பழனிசாமி பேச்சு.!!!

நெல்லை: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ரூ.208.30 கோடியில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2,800 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட  உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முடிவுற்ற ரூ.32.30 கோடி  மதிப்பிலான 20 திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில்   உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு  செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குணமடைவோர் சதவீதம் அதிகம்; இறப்பு விகிதம்  குறைவு என்றார். தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.

கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு  செயல்படுத்துகிறது. விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை  எடுத்துள்ளோம். நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் புதிய தடுப்பணைகளை அரசு கட்டி வருகிறது. விவசாயிகளின்  பங்களிப்புடன் குடிமராமத்து திட்டப் பணிகளை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. எம்எல்ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று தடுப்பணைகள்  கட்டப்படுகின்றன. மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

Related Stories: