×

லெபனானில் பயங்கர வன்முறை!: 135 பேர் பலியான விபத்தால் மக்கள் ஆவேசம்..ஊழல், அலட்சிய போக்கே காரணம் என சாடல்..!!

லெபனான்: பெய்ரூட் துறைமுகத்தில் நேரிட்ட பயங்கர வெடிவிபத்துக்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சியப் போக்கே காரணம் என கூறி பொதுமக்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. லெபனான் நாட்டின் தலைநகரம் பெய்ரூட்டில் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் துறைமுகம் உருக்குலைந்து சின்னாபின்னமானது.

வெடி விபத்து காரணமாக சுமார் 135 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், 4 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, வெடிவிபத்தில் மரணமடைந்த பாதுகாப்பு அதிகாரி ஜர்ஜஸ் போட்ச் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது உறவினர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.

இதனிடையே வெடிவிபத்துக்கு காரணமாக கருதப்படும் துறைமுக அதிகாரிகளை அந்நாட்டு அரசு வீட்டு காவலில் வைத்துள்ளது. லெபனானுக்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருந்து மருத்துவ சாதனங்கள், மருந்துகள் என 3 விமானங்களில் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Tags : Lebanon ,accident ,Sadal ,Politicians , lebanon,corruption,Ammonium nitrate,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...