×

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.17 லட்சத்தை தாண்டியது; பாதிப்பு 1.92 கோடியாக உயர்வு...65,225 பேர் கவலைக்கிடம்

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.17 லட்சத்தை தாண்டியது.  சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது  209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா,  இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,17,368 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும்  கொரோனாவால் 19,244,698 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,350,302 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 65,225 பேர்  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,025,409 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 41,638 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,377,384 பேர்  குணமடைந்தனர்.  

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 162,804 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,032,179 ஆக அதிகரித்துள்ளது.

* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 98,644 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,917,562 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,606 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,71,894 ஆக அதிகரித்துள்ளது.

* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,228 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 447,624 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,500 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 354,530 ஆக அதிகரித்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,976 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 320,117 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,413 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 308,134 ஆக உயர்ந்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,187 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 249,204 ஆக உயர்ந்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,252 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215,210 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,312 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195,633 ஆக அதிகரித்துள்ளது.

* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,521 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118,753 ஆக அதிகரித்துள்ளது.

* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,045 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,153 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,982 ஆக அதிகரித்துள்ளது.

* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,555 ஆக அதிகரித்துள்ளது.

* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,026 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,263 ஆக அதிகரித்துள்ளது.

* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,038 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில்  பலி எண்ணிக்கை  உயர்ந்துக்கொண்டு  வருகிறது.


Tags : Worldwide, the death toll from corona exceeds 7.17 million; The impact has risen to 1.92 crore ... 65,225 people are worried
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...