×

இன்ஜி. கல்வி கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கட்டணக் குழுவிடம் தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். கட்டணக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 400க்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஆன்லைன் மூலம் கட்டண கமிட்டிக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளன. இதை அடிப்படையாக கொண்டு வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை குழு நிர்ணயம் செய்யும். இந்நிலையில், கடந்த ஆண்டுடன் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக 25 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகள் சார்பில் கட்டணக் குழுவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Tags : Eng , Eng. Tuition fees, raise, demand
× RELATED முழு கல்வி கட்டணம் வசூல் - 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்