×

ஜிம் உள்ளே செல்ல வெளியே வர தனிப்பாதை: வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
* உடற்பயிற்சி கூடத்தில் 50 வயதுக்கு மேல், 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதிக்க இல்லை.
* மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்
* பயிற்சியின்போது 40 முதல் 60 விநாடி சோப் கொண்டும் 20 விநாடி கிருமிநாசினியாலும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்
* உடற்பயிற்சி கூடத்தில் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனி பாதை அமைக்க வேண்டும்
* பணப்பரிமாற்றத்தை இணையதள வசதியுடன் செய்ய அறிவுறுத்தல்.
* குளிர்சாதன வசதி கட்டுக்குள் இருக்க வேண்டும்
* பயிற்சியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடைவெளி 6 அடி இருக்க வேண்டும்
* எந்த அறிகுறி இல்லாமல் இருந்தால் மட்டுமே உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும்.
* உடற்பயிற்சி கூடத்தில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை உறுப்பினர்கள் வந்து சென்று இருக்க வேண்டும்.
* ஆன்லைன் மூலம் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.
* கட்டுப்படுத்தப்பட்ட பகுதி பணியாளர்களுக்கு அனுமதியில்லை.
* உடற்பயிற்சி கூடத்துக்கு வருபவர்களை தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பிறகு, நுழைவு வாயிலில் சானிடைர் வைத்து கையில் சுத்தம் செய்த பிறகே உறுப்பினரை அனுமதிக்க வேண்டும்.
* உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் நபர்களின் பெயர், தொலைபேசி எண், முகவரி தினமும் பதிவேடுகளில் எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : gym ,Government of Tamil Nadu , Jim, Privacy, Guideline, Government of Tamil Nadu
× RELATED டோனி அவரது வேலையை எப்படி செய்து...