×

சில்லி பாயின்ட்…

* இங்கிலாந்து அணியுடன் மான்செஸ்டரில் நடக்கும் முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. ஷான் மசூத், பாபர் ஆஸம் அரை சதம் விளாசினர்.
* ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ள ஆஸி. வீரர் ஆரோன் பிஞ்ச், ‘விராத் கோஹ்லி தலைமையின் கீழ் ஆடும் நாளுக்காக ஆவலுடனும் உற்சாகத்துடனும் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.   
* இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரின் ‘டைட்டில் ஸ்பான்சராக’ விவோ நிறுவனம் இருக்காது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
* கால்பந்து விளையாட்டில் தனக்கு சரியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்று தடகள நட்சத்திரம் உசேன் போல்ட் வருத்தம் தெரிவித்துள்ளார்.
* வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

Tags : Chili, Point
× RELATED சில்லி பாயின்ட்...