×

உடனே பயிற்சியை தொடங்குங்கள்… ரெய்னா உற்சாகம்

புதுடெல்லி: களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என்று சக வீரர்களுக்கு சுரேஷ் ரெய்னா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டுள்ள ரெய்னா, தனது வலைப்பயிற்சி வீடியோவை சமூக ஊடங்களில் நேற்று வெளியிட்டுள்ளார். அதோடு, ‘நான் மிகவும் விரும்புவதை செய்கிறேன். கடினமாக பயிற்சி செய்யுங்கள். போட்டிக்குத் தயாராகுங்கள். களம் இறங்கும் வரை காத்திருக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.    

* சின்ன தல: ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ள ரெய்னா சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 193 போட்டியில் 5368 ரன் எடுத்துள்ளார் (சராசரி: 33.34, சதம் 1, அரை சதம்  38).
* சவாலான சூழல்: சென்னையில் விளையாடுவதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அங்குள்ள வானிலை மற்றும் சூழல் எங்களுக்கு  சவாலாகத்தான் இருக்கும். அதிக வெப்பநிலை நிலவும் போது விக்கெட்களை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதை கவனிக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப திட்டமிட்டு விளையாட வேண்டும். போட்டி நடைபெறும் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங் களுக்கான பயண நேரம் மிகவும் குறைவு என்பதால் ஓய்வுக்கும் திட்டமிடுவதற்கும் போதுமான நேரம் கிடைக்கும் என்கிறார் ரெய்னா.

Tags : Raina , Start training right away, Raina, get excited
× RELATED சிக்கலில் சிஎஸ்கே: ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் விலகல்