கொரோனாவுக்கு எஸ்ஐ பலி

குன்றத்தூர்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் நரசிம்மன் தெருவை சேர்ந்தவர் பாண்டிமுனி (53). குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக வேலை பார்த்தார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி பாண்டிமுனிக்கு உடல்நிலை பாதித்தது. அவரை பரிசோதனை செய்ததில், கொரோனா உறுதியானது. இதையடுத்து, அவர் நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் மட்டும், இதுவரை 477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்யூர்: செய்யூர் அருகே லத்தூர் கிராமத்தில், 30 வயது இளம்பெண். அவரது ஒரு வயது குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்சல், சளி இருந்தது. அவர்களை பரிசோதனை செய்ததில், இருவருக்கும் கொரோனா உறுதியானது. அதே கிராமத்தில், 5 வயது சிறுமிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, திருவாதூர், செய்யூர், சூனாம்பேடு, புத்திரன்கோட்டை ஆகிய பகுதகிளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>