×

தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மகன் சுஜன் (12). முசரவாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் ஜகத்பிரியன் (8). இந்நிலையில், நேற்று மதியம் திருப்புட்குழி கிராமத்தில் உள்ள தாமரைக்குளத்தில் சிறுவர்கள் குளித்தனர். அப்போது, அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து, காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் வந்து, தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை சடலமாக மீட்டனர். புகாரின்படி பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : boys ,Death , Drowning, 2 boys, death
× RELATED வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது